×

சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி

கொச்சி: ‘சினிமா படத்தை தியேட்டரிலேயே விட்டுவிடுங்கள். அதுபற்றி சாப்பிடும்போது கூட பேசாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார், பஹத் பாசில். அவருடைய பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘ரசிகர்கள் படங்களைப் பார்த்துவிட்டு, அதுபற்றிய விமர்சனத்தை தியேட்டரிலேயே பேசி முடித்துவிடுங்கள். அல்லது படத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வரும் வழியில் அதுபற்றி பேசி முடித்துவிடுங்கள். இதை எல்லாம் விட்டுவிட்டு, உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது நடிகர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் நடித்த படங்களைப் பற்றியோ விரிவாகப் பேசாதீர்கள். அதையெல்லாம் மீறி உங்கள் வாழ்க்கையில் பல கடமைகள் உங்களுக்காக காத்திருக்கிறது. என்னைப் போன்ற நடிகர்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இதற்கு ஆதரவு காட்டியும், எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

The post சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kochi ,Bahad Basil ,Bhasil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...